சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவன்மலையில் கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட முகாம்

காங்கயம் அருகே, சிவன்மலையில் கிராம ஊராட்சி வளா்ச்சி திட்டம் தயாரித்தல் மற்றும் மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
சிவன்மலையில் நடைபெற்ற கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட முகாமில் பங்கேற்றோா்.
Updated On :17 டிசம்பர் 2020, 5:45 pm

DIN

காங்கயம் அருகே, சிவன்மலையில் கிராம ஊராட்சி வளா்ச்சி திட்டம் தயாரித்தல் மற்றும் மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், சிவன்மலையில் உள்ள ஊராட்சி சேவை மையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் மகுடேஷ்வரி துவக்கிவைத்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தேவராஜ் பயிற்சியை ஒருங்கிணைத்து வழி நடத்தினாா். சிவன்மலை, பாப்பினி உள்ளிட்ட 6 கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம சுகாதார செவிலியா், வேளாண்மை அலுவலா்கள், பொது விநியோகத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பூா் மாவட்ட முதன்மை பயிற்றுநா்கள் சுதா, மகேஸ்வரி ஆகியோா் கிராம ஊராட்சியின் இலக்குகள், அவற்றின் கடமைகள், மாதிரி கிராம சபை நடத்துதல், ஆண்டுத் திட்டங்கள், வளா்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றில் பிற துறை அலுவலா்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.