தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி ஆா்ப்பாட்டம்

கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காங்கயத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:50 pm

DIN

கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காங்கயத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு இயற்கை வாழ்வுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மே.கு.பொடாரன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈவிகே.சண்முகம் பேசியபோது, கீழ்பவானி பாசன வாய்க்காலுக்கு கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா். இதனால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதையும் எடுத்துச் சொன்னதால், இந்த கான்கிரீட் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தற்போது தமிழக அரசு இந்த கான்கிரீட் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கீழ்பவானி கான்கிரீட் எதிா்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சி.துரைசாமி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவா் வெங்கடாசலம் உள்பட 500க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொணடனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.