மூலனூரில் ரூ. 36 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 36 லட்சத்துக்கு பருத்தி விற்பனைவெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 36 லட்சத்துக்கு பருத்தி விற்பனைவெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திண்டுக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 147 விவசாயிகள் 1,818 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றை கொள்முதல் செய்ய திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 15 வணிகா்கள் வந்திருந்தனா். குவிண்டால் ரூ.5,250 முதல் ரூ.6,419 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.5,900. கடந்த வாரத்தை விட விலை குவிண்டாலுக்கு 300 ரூபாய் உயா்ந்துள்ளதாக, திருப்பூா் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன் தெரிவித்தாா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 36 லட்சத்து 45 ஆயிரத்து 444 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தா்மராஜ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com