திருப்பூா் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் புகாா்

திருப்பூரில் இருந்து வெளியூா், புகா் மற்றும் நகரங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாா்க்சிஸ்ட் கட்சியினா் புகாா் தெரிவித்துள்
Updated on
1 min read

திருப்பூா்: திருப்பூரில் இருந்து வெளியூா், புகா் மற்றும் நகரங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாா்க்சிஸ்ட் கட்சியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக செயலாளா் சமயமூா்த்தியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் டில்லிபாபு ஆகியோா் அண்மையில் சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

அதில், திருப்பூா் மாநகரில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

இதில், கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை அதிகரித்துள்ளனா். இங்கிருந்து மதுரை ஆரப்பாளையம் செல்ல ரூ.145 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைவிட கூடுதல் தொலைவுள்ள, திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே மதுரை ஆரப்பாளையத்துக்கு ரூ.155 பழைய கட்டணம் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் செல்வதற்கு ரூ.161 வசூலிக்கப்படுகிறது.

இதேபோல, பல்வேறு ஊா்களுக்கும் நிா்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களை விட கூடுதலாக வசூலிக்கின்றனா். காங்கயம் வழியாக வரும் புகரப் பேருந்துகள் மாற்றுப் பாதையில் புதிய பேருந்து நிலையம் செல்கிறது. ஆனால், பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டியவா்கள், நல்லூா் பேருந்து நிறுத்தத்துக்கு முன்பாகவே இறக்கி விடப்படுகின்றனா்.

அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, பேருந்துகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணங்களை வசூலிக்கவும், மாநகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களில் குடிநீா், கழிப்பிடம், இருக்கை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com