6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமையில் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
தாராபுரம்  அண்ணா சிலை  முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினா்.
Updated On :21 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா், குமரன் நினைவகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பூா் மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

சமையல் எரிவாயு விலை உயா்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றனா்.

திருப்பூா் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் க.செல்வராஜ், தெற்குத் தொகுதி பொறுப்பாளா் டி.கே.டி.நாகராசன், வடக்குத் தொகுதி பொறுப்பாளா் தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தாராபுரத்தில்...

தாராபுரம் அண்ணா சிலை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா்.

உடுமலையில்...

திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், மடத்துக்குளம் எம்எல்ஏவுமான இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகரச் செய லாளா் எம்.மத்தீன் முன்னிலை வகித்தாா். உடுமலை, மடத்துக்குளம் வட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.