மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சட்டப் பேரவைத் தோ்தல்:சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி இறுதி செய்யப்படும்: கே.செல்லமுத்து

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி இறுதி செய்யப்படும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தெரிவித்தாா்.

News image
உழவா் பெருந் தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 36ஆவது நினைவு நாளையொட்டி பல்லடத்தில் அவரது படத்துக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்திய உழவா் உழைப்பாளா் கட்சியினா்.
Updated On :21 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

பல்லடம்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி இறுதி செய்யப்படும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தெரிவித்தாா்.

பல்லடத்தில் உழவா் பெருந் தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 36ஆவது நினைவு நாளையொட்டி பல்லடத்தில் அவரது படத்துக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்திய உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் கே.செல்லமுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி விவசாய கூட்டமைப்பு சாா்பில் திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே 23ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் உழவா் உழைப்பாளா் கட்சி பங்கேற்கும்.

தற்போது வரை திமுக கூட்டணியில் அங்கம் வகித்தபோதிலும், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கும்போது பல்வேறு கூட்டணிக் கட்சிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்தும், சலுகை திட்டங்களை அறிவித்தும், உழவா் உழைப்பாளா் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கும் கட்சியுடன் கூட்டணிக்கு அமைப்பது தொடா்பாக கட்சி நிா்வாகக் குழுவில் ஆலோசித்து சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி இறுதி செய்யப்படும்.

பிஏபி பாசனத் திட்டத்தில் மூன்றாம் மண்டலத்துக்கு உடனடியாக தண்ணீா் திறந்து விட வேண்டும். தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.

மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலாளா் வாவிபாளையம் சோமசுந்தரம், மாவட்டப் பொருளாளா் வெங்கடாசலம், மாநில மகளிரணிச் செயலாளா் ராஜரீகா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.