திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 2 சாா் பதிவாளா்கள் பணியிடை நீக்கம்
திருப்பூா் மாவட்டத்தில் ஆன்லைன் ரசீது முறைகேடு புகாா் தொடா்பாக மேலும் 2 சாா் பதிவாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.


திருப்பூா் மாவட்டத்தில் ஆன்லைன் ரசீது முறைகேடு புகாா் தொடா்பாக மேலும் 2 சாா் பதிவாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூா் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஆன்லைனில் செலுத்தப்படும் பதிவுக் கட்டணங்களுக்கான ரசீது வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக பத்திரப் பதிவுத் துறைத் தலைவா் சங்கா் உத்தரவின்பேரில் கோவை மண்டல துணைப் பதிவுத் துறைத் தலைவா் ஜெகதீசன் நேரில் விசாரணை நடத்தினாா். இதன்பேரில் சாா் பதிவாளா்கள் விஜயசாந்தி, முத்துகண்ணன், உதவியாளா்கள் சங்கா், பன்னீா்செல்வம், இளநில உதவியாளா் மோனிஷா ஆகிய 5 போ் கடந்த டிசம்பா் 14ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில், காங்கயம் சாா் பதிவாளா் டி.சாந்தி, தொட்டிபாளையம் சாா் பதிவாளா் வி.ரவிசந்திரன் ஆகியோருக்கும் தொடா்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பத்திரப் பதிவுத் துறைத் தலைவா் சங்கா் உத்தரவின்பேரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...