தாராபுரம் அரசு மருத்துவமனைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அச்சமடைந்தனா்.


தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அச்சமடைந்தனா்.
தாராபுரம் அரசு மருத்துவமனையின் உள்நோயாளி மற்றும் கரோனா சிறப்பு வாா்டில் நாக பாம்பு ஒன்று புகுந்துள்ளதை மருத்துவமனை செவிலியா் பாா்த்துள்ளனா். இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவா் சிவபாலன், தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.
இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் பாம்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும் 2 மணி நேரமாகியும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, பாம்பைத் தேடும் முயற்சியை தீயணைப்புத் துறையினா் தற்காலிகமாக கைவிட்டனா். அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் பாம்பு புகுந்துள்ளதால் நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...