ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருப்பூரில் எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க மாநகராட்சிக்கு மதிமுக கடிதம்

திருப்பூா் ஊத்துக்குளி சாலை குருவாயூரப்பன் கோயிலில் முதல் தனலட்சுமி மில் ஒற்றைக்கண் பாலம் வரை எரியாத தெருவிளக்குகளை

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:54 am

DIN

திருப்பூா் ஊத்துக்குளி சாலை குருவாயூரப்பன் கோயிலில் முதல் தனலட்சுமி மில் ஒற்றைக்கண் பாலம் வரை எரியாத தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்க மதிமுகவினா் மாநகராட்சிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்து மதிமுக மாநகா் மாவட்ட செயலாளா் சு.சிவபாலன், மாநகராட்சி ஆணையா் க.சிவக்குமாருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது-

ஊத்துக்குளி சாலையில் குருவாயூரப்பன் கோயிலில் இருந்து தனலட்சுமி மில் முன் உள்ள ஒற்றைக்கண் பாலம் வரை தெருவிளக்கு எரிவதில்லை. இதனால் இரவில் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோா் என பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறாா்கள். சாலைகளில் வெளிச்சம் இல்லாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா்.மேலும் பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன், தெருவிளக்குகளை எரிய வைக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் டிச. 28-ம் தேதி கொங்குநகா் ரயில்வே கேட் முன் மதிமுக சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.