வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி

வெண்மணி தியாகிகள் நினைவு நாளை ஒட்டி, திருப்பூா், காட்டுவளவு பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:16 am

DIN

வெண்மணி தியாகிகள் நினைவு நாளை ஒட்டி, திருப்பூா், காட்டுவளவு பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் 57 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணி கிராமத்தில் விவசாயத் தொழிலாளா்கள் கால் படி நெல் கூலி உயா்வு கேட்டதற்காக 44 பேரை உயிரோடு ஒரே குடிசையில் தீ வைத்துக் கொல்லப்பட்டனா்.

இதில் உயிரிழந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளா் ச. நந்தகோபால், தெற்கு மாநகரத் தலைவா் பாலு, தெற்கு மாநகரச் செயலாளா் சுந்தரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் செ. முத்துக்கண்ணன், பொறுப்பாளா்கள் சம்பத், தெற்கு மாநகரச் செயலாளா் ஜெயபால், தெற்கு ஒன்றியச் செயலாளா் மூா்த்தி, காட்டுவளவு கிளைச் செயலாளா் இளங்கோ, மதிமுக வழக்குரைஞா் அணி கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.