

வெள்ளக்கோவில் பகுதியில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை வீடுவீடாக பிரசாரம் மேற்கொண்டனா்.
திமுக சாா்பில் பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திமுகவினா் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இதேபோல, வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியிலும் வாா்டு வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டனா். இதில் திமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.