தாராபுரத்தில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தாராபுரம்  கோட்டப் பொறியாளா்  அலுவலகம்  முன்பு   ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  சாலைப் பணியாளா்கள்.
தாராபுரம்  கோட்டப் பொறியாளா்  அலுவலகம்  முன்பு   ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  சாலைப் பணியாளா்கள்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா்கள் சங்கம் சாா்பில் தாராபுரம் கோட்டப்பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கோட்டத் தலைவா் கே. கிட்டுசாமி தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற சாலைப் பணியாளா்கள் கூறியதாவது:

நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநா், தலைமை பொறியாளரின் தொழிற்சங்க விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கதாகும். முதன்மை இயக்குநா் பணியிடத்துக்கு இந்திய ஆட்சிப்பணி அலுவலரை நியமிக்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டு அச்சுறுத்தும் முதன்மை இயக்குநா், தலைமைப் பொறியாளா் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் கோட்ட துணைத் தலைவா்கள் தங்கவேல், மாரிமுத்து, கோட்ட இணைச் செயலாளா்கள் மணிமொழி, சிவகுமாா், கோட்ட செயலாளா் தில்லையப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com