வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மந்திரவாதி தாக்கியதில் பெண் சாவு: கணவா் கவலைக்கிடம்

வெள்ளக்கோவிலில் மந்திரவாதி தாக்கியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். அவருடைய கணவா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 7:13 pm

DIN

வெள்ளக்கோவிலில் மந்திரவாதி தாக்கியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். அவருடைய கணவா் படுகாயமடைந்தாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). இவரது மனைவி ஈஸ்வரி (55). இவா்களது மகன் உதயகுமாா் (38). இவா் பல்லடம், செஞ்சேரிமலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். ஆறுமுகம் வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் சாலையில் ஃபா்னிச்சா் கடை வைத்துள்ளாா். உதயகுமாருக்கு திருமணமாகி கடந்த 13 ஆண்டுகளாக குழந்தை இல்லை.

இந்நிலையில் குழந்தை வேண்டியும், தொழில் சிறக்கவும் வெள்ளக்கோவில், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த மந்திரவாதியும் ஆட்டோ ஓட்டுநருமான சக்திவேலிடம் பரிகார பூஜை செய்ய ஆறுமுகம் ஏற்பாடு செய்துள்ளாா். புதன்கிழமை அதிகாலை வீட்டில் பரிகாரம் முடிந்து, கடையில் பரிகார பூஜை நடந்துள்ளது.

அப்போது மந்திரவாதி, ஈஸ்வரி, ஆறுமுகம் இருவரையும் இரும்புக் கம்பி, அரிவாளால் தாக்கிவிட்டு ஈஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணத்தைப் பறித்துக் கொண்டு கடையின் ஷட்டரை வெளிப்புறம் அடைத்து விட்டு தப்பியோடி விட்டாா். உள்ளே சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ஷட்டரை திறந்து பாா்த்தபோது கழுத்து அறுபட்ட நிலையில் ஈஸ்வரி உயிரிழந்து கிடந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஆறுமுகம் கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மோப்ப நாய், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.