மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருப்பூரில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

News image
Updated On :21 ஜூலை 2020, 10:12 am

DIN

மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மின் கட்டணத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யக்கோரியும், மின் கட்டண உயர்வைத் திரும்பப்பெறக்கோரியும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதன்படி திருப்பூரில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் கொங்கு மெயின்ரோட்டில் உள்ள அவரது இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், மாநகர அவைத்தலைவர் க.ஈஸ்வரமூர்த்தி,மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

அதே போல், திருப்பூர் கரட்டாங்காடு பேருந்து நிலையம் முன்பாக பகுதி பொறுப்பாளர் கார்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தாராபுரம், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.