டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருப்பூர் மாநகராட்சி இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளி இடிப்பு

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக் கட்டடத்தை காவல் துறையினரின் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை இடித்தனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:00 pm

DIN

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக் கட்டடத்தை காவல் துறையினரின் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை இடித்தனர்.

திருப்பூர் வாலிபாளையம் சடையப்பன் கோயில் அருகில் 1970 ஆம் ஆண்டு திருப்பூர் நகராட்சி காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டது.இதைத்தொடர்ந்து, காய்கறி மார்க்கெட் கட்டடத்துடன் பள்ளி நடத்த தனியாருக்கு ரூ.150க்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த நிலையில், திருப்பூர் நகராட்சி சார்பில் 1982 ஆம் பள்ளிக்கட்டடத்தை காலி செய்யும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

ஆனால் பள்ளி நிர்வாகம் காலி செய்ய மறுத்ததுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் தற்போது மாநராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் தங்கவேல்ராஜன், சுப்பிரமணி ஆகியோர் காவல் துறையினரின் பாதுகாப்புடன் தனியார் பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

இதன் மூலமாக 38 ஆண்டுகளுக்குப் பின்னர் ரூ.3 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணியில் திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.