வெள்ளக்கோவிலில் மதமாற்றம் செய்ய வந்ததாக 7 இஸ்லாமியர்கள் சிறைப்பிடிப்பு

வெள்ளக்கோவிலில் மதமாற்றம் செய்ய வந்ததாக 7 இஸ்லாமியர்கள் சிறைப்பிடிப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் திருவள்ளுவர் நகருக்கு ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து இரண்டு கார்களில் 7 முஸ்லிம்கள் வந்தனர். 
Published on

திருப்பூர், மாவட்டம் வெள்ளக்கோவில் திருவள்ளுவர் நகருக்கு ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து இரண்டு கார்களில் 7 முஸ்லிம்கள் வந்தனர். 

இவர்கள் கைகளில் மாந்திரீக கயிறுகள், மயில் இறகுகளை வைத்துக்கொண்டு அவற்றின் மூலம் பல்வேறு நோய்களைத் தீர்க்கலாம். கரோனாவையும் விரட்டலாம். இதற்கு குரான் புத்தகத்தை வாசித்து, வழிபட வேண்டுமென வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

தகவலறிந்த பொதுமக்கள், இந்து முன்னணியினர் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லி, வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 7 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். மதமாற்றப் பிரச்சாரம் செய்ததால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com