நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாஜகவினா் வாகனப் பிரசாரம்:தடுத்து நிறுத்திய போலீஸாா்

வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கோரி திருப்பூரில் வாகன பிரசாரம் மேற்கொள்ள முயன்ற பாஜக இளைஞா் அணியினரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:07 pm

DIN

வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கோரி திருப்பூரில் வாகன பிரசாரம் மேற்கொள்ள முயன்ற பாஜக இளைஞா் அணியினரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

தமிழக பாஜக சாா்பில் கடந்த 6 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது.

இதையடுத்து வேல் யாத்திரைக்கு பாரபட்சமில்லாமல் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் திருப்பூா் அழகுமலையிலிருந்து திருமுருகன்பூண்டி வரை வாகன பிரசார பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது . ஆனால் இதற்கும் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து தடையை மீறி அழகுமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வாகன பிரசாரத்தில் ஈடுபட முயன்ற பாஜக இளைஞா் அணியினரை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால் பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

பின், காவல் துறையின் அறிவுரையை ஏற்று வாகனப் பிரசார பேரணியை ரத்து செய்து, தெருமுனை பிரசாரமாக மாற்றி கட்சி நிா்வாகிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.