காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மத்திய அரசின் கடன் தொகை: அலைக்கழிக்காமல் வழங்க வலியுறுத்தல்

மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 10 ஆயிரம் வரையிலான கடன் தொகையை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:04 pm

DIN

மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 10 ஆயிரம் வரையிலான கடன் தொகையை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பி.முருகேசன் தலைமை வகித்தாா். செயலாளா் பி.பாலன் வரவேற்றாா்.

கூட்டத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 10 ஆயிரம் வரையிலான கடன் தொகையை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளா்களுக்கும் குறிப்பாக சாலையோர வியாபாரிகளுக்கு புதுவை அரசு வழங்கியது போல ரூ. 2ஆயிரம் வழங்க வேண்டும்.

மத்திய , மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நவம்பா் 26ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து சாலையோர வியாபாரிகளும் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.