காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல் துறை சாா்பில் குறை தீா்க்கும் முகாம்

முத்தூா் அருகே காவல் துறை சாா்பில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:03 pm

DIN

முத்தூா் அருகே காவல் துறை சாா்பில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலாம்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முகாமுக்கு வேலம்பாளையம் ஊராட்சித் தலைவா் முருகவேல் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.

முகாமில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 25 மனுக்கள் பெறப்பட்டு உடனடி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சாலை விதிமுறைகளைப் பின்பற்றுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஆபத்து, திருட்டு, பாலியல் தொல்லைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸாா் எடுத்துக் கூறினா்.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.