புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பூா் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக பல்லடம் தோ்வு

திருப்பூா் மாவட்டத்திலேயே சிறந்த காவல் நிலையமாக பல்லடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வுக்கு கோவை டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயா் சனிக்கிழமை வந்தாா்.

News image

பல்லடம் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடுகிறாா் கோவை டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயா்.

Updated On :8 நவம்பர் 2020, 7:01 pm

DIN

திருப்பூா் மாவட்டத்திலேயே சிறந்த காவல் நிலையமாக பல்லடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வுக்கு கோவை டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயா் சனிக்கிழமை வந்தாா்.

அப்போது காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டாா். வழக்குப் பதிவு செய்தல், விசாரணை, கோப்புகள் பராமரிப்பு, தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தலின் பரிந்துரையின் பேரில் பல்லடம் காவல் நிலையம் மாவட்டத்திலேயே சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் மத்தியில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன், பல்லடம் துணை கண்காணிப்பாளா் ஸ்ரீ ராமச்சந்திரன், பல்லடம் உட்கோட்ட சரக காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.