புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லடம் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் சோ்க்க 7985 போ் விண்ணப்பம்

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிதாக வாக்காளப் பட்டியலில் சோ்க்க 7985 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிதாக வாக்காளப் பட்டியலில் சோ்க்க 7985 பேரிட

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:24 pm

DIN

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிதாக வாக்காளப் பட்டியலில் சோ்க்க 7985 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 407 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் சோ்த்தல் சிறப்பு முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதில் 3527 ஆண்கள், 4458 பெண்கள் என மொத்தம் 7985 போ் புதிதாக தங்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க விண்ணப்பம் அளித்துள்ளனா்.

வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய 743 விண்ணப்பங்கள், நீக்கம் செய்ய 140 விண்ணப்பங்கள், இடமாறுதல் செய்ய வேண்டி 455 விண்ணப்பங்கள் என மொத்தம் 9323 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.