புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அனுமதியின்றி வேல் யாத்திரை பொதுக் கூட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் கைது

திருப்பூரில் அனுமதியின்றி நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகை குஷ்பு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

News image

வாகனத்தின் மீது ஏறி பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

Updated On :22 நவம்பர் 2020, 6:24 pm

DIN

திருப்பூரில் அனுமதியின்றி நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகை குஷ்பு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

பாஜக தலைவா் எல்.முருகன் மேற்கொள்ளும் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூா் பல்லடம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பொதுக் கூட்ட வளாகத்தில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

இதனால், பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகை குஷ்பு உள்ளிட்டோா் மேடையில் ஏறாமல், எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது ஏறி பேசினா்.

இதையடுத்து, அனுமதியின்றி வேல் யாத்திரை பொதுக் கூட்டம் நடத்தியதற்காக முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகை குஷ்பு உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் கைது: பாஜகவின் வேல் யாத்திரைக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஊா்வலம் செல்ல முயன்ற பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் 70க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.