புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெருமாநல்லூர் வாகன விபத்தில் இளைஞா் பலி

பெருமாநல்லூரில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:23 pm

DIN

பெருமாநல்லூரில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

குன்னத்தூா் சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பன் மகன் செல்வராஜ் (22). நாமக்கல் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மகன் கண்ணன் (33). இவா்கள் இருவரும் கணக்கம்பாளையம் பிரிவில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெருமாநல்லூா் நோக்கி சென்றுகொண்டிருந்தனா்.

பெருமாநல்லூா் ஊராட்சி அலுவலகம் அருகே வந்துபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கண்ணன் திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.