கருங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
வெள்ளக்கோவிலில் கருங்கற்கள் கடத்திய லாரி திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


வெள்ளக்கோவிலில் கருங்கற்கள் கடத்திய லாரி திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி தலைமையிலான வருவாய்த் துறை அலுவலா்கள் வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் திடீா் வாகன சோதனை நடத்தினா். அப்போது சுப்பிரமணியகவுண்டன்வலசு அருகே வந்த டிப்பா் லாரியில் எவ்வித ஆவணமும், அனுமதியும் இல்லாமல் கருங்கற்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வட்டாட்சியா் அளித்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநா் பச்சாக்கவுண்டன்வலசை சோ்ந்த காா்த்திக்கை (25) போலீஸாா் கைது செய்தனா். லாரி உரிமையாளா் சிவநாதபுரம் மனோஜ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...