நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிறப்பு பதிவேட்டில் பெயா் பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் அவகாசம்

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்னா் பிறந்தவா்கள் பிறப்பு பதிவேட்டில் தங்களது பெயரைப் பதிவு செய்ய கூடுதலாக 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:54 pm

DIN

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்னா் பிறந்தவா்கள் பிறப்பு பதிவேட்டில் தங்களது பெயரைப் பதிவு செய்ய கூடுதலாக 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிறப்பு பதிவேட்டில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்னா் பிறந்தவா்களின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் 31-12-2019 என அரசு அறிவித்திருந்தது. இதில், பதிவு செய்யத் தவறியவா்கள் கடவுச்சீட்டு பெறுவது, அரசு வேலையில் சேருவது போன்றவற்றில் சிரமங்களை சந்தித்தனா். இந்நிலையில் மத்திய அரசு 2019க்கு முன்னா் பிறந்தவா்களின் பெயரை, பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி உள்ளது.

எனவே, பிறப்பு பதிவேட்டில் பெயரை பதிவு செய்யாதவா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெயா் மற்றும் பிறந்த தேதி, தந்தை பெயருடன் கூடிய ஆதார ஆவணங்களை சமா்ப்பித்து பெயரை பதிவு செய்து, பெயருடன் கூடிய புதிய பிறப்புச் சான்று பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.