47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூரில் சாலையை சீரமைக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 1 ஆவது மண்டல அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

News image
திருப்பூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
Updated On :5 அக்டோபர் 2020, 8:44 am

DIN

திருப்பூர்: திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 1 ஆவது மண்டல அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் உள்ள 1 ஆவது மண்டல அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு நகர தலைவர் வி.நவநீதன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற வாலிபர் சங்கத்தினர் கூறியதாவது: திருப்பூர் அவிநாசி சாலையில் இருந்து ஆத்துப்பாளையம் மின் மயானம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. 

இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதேபோல இந்தப் பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாய்களுக்கு மேல்மூடி இல்லாததால் வாகன ஓட்டிகள் சாக்கடைக் கால்வாய்க்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாநரகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 15 நாள்களில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்டத் தலைவர் ஞானசேகர், நகர செயலாளர் கே.ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.