47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நொய்யலில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி சாவு

திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:47 am

DIN

திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

திருப்பூர் சுகுமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர், பிரிண்டிங் தொழிலாளியான இவருக்கு சபீர்(11), சாகிப் (7) என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்த இருவரம் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்று நொய்யல் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதன் பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை. 

இதுகுறித்து பஷீர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் மகன்களைக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் நொய்யல் ஆற்றங்கரையில் இரு சிறுவர்களின் சடலம் கரை ஒதுங்கியதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மீன்பிடிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சுகுமார் நகர் பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.