தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

காங்கயத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும் சங்கத்தின் தலைவா் டி.அருணாச்சலம்.

Updated On :18 அக்டோபர் 2020, 5:46 pm

DIN

காங்கயத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் டி.அருணாச்சலம் தலைமை வகித்தாா். செயலாளா் பி.கே.பி.சண்முகம், பொருளாளா் வி.டி.ராசு, சங்க ஆலோசகா் என்.எஸ்.என்.நடராஜ், ஆடிட்டா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சங்கத்துக்கு புதியக் கட்டடம் கட்டுவது, சங்கத்தின் மூலமாக தொழில் வளா்ச்சிக்கு செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள், சேவை வரி, வருமான வரி, கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், சங்கத்தின் புதிய தலைவராக என்.எஸ்.என்.தனபால், செயலாளராக கங்கா சக்திவேல், பொருளாளராக பாலாஜி ரவிச்சந்திரன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.