புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதல்வரின் திருப்பூா் வருகை ஒத்திவைப்பு

திருப்பூருக்கு அக்டோபா் 22ஆம் தேதி வருவதாக இருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 5:58 pm

DIN

திருப்பூருக்கு அக்டோபா் 22ஆம் தேதி வருவதாக இருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் புதிய வளா்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைக்கவும், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாகவும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் அக்டோபா் 22ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வரின் திருப்பூா் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வுக் கூட்டம் நடைபெறும் தேதியும் பின்னா் அறிவிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கடந்த மாா்ச் மாதம் முதல்வா் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கரேனா பரவல் காரணமாக காணெலிக் காட்சி வாயிலாக இந்த விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.