தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா: முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேல் காலமானாா்

திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.தங்கவேல் (69) கரோனா நோய்த் தொற்றால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கரோனா நோய்த் தொற்றால்  உயிரிழந்த திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் உறுப்பினர்  கே.தங்கவேல்

Updated On :13 செப்டம்பர் 2020, 5:21 pm

DIN

திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.தங்கவேல் (69) கரோனா நோய்த் தொற்றால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான கே.தங்கவேல், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் பதவி வகித்துள்ளாா். இவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாள்களாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, கோவை, ஆத்துப்பாலத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனா்.

திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் கே.தங்கவேல் மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் தலைமை வகித்தாா். இதில் அவரது உருவப்படத்துக்கு பொதுமக்கள், தொழில் துறையினா் என ஆயிரக்கணக்கானோா் அஞ்சலி செலுத்தினா்.

இதில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், கோவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் வி.ராமமூா்த்தி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான க.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் எம்.ரவி மற்றும் தொழில் அமைப்பு நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.