நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதிய கல்விக்கொள்கையைக் கண்டித்து ஆா்ப்பட்டம்

புதிய கல்விக்கொள்கையை உள்ளிட்ட மத்திய அரசு அமல்படுத்தும் கொள்கைகளைக் கண்டித்து திருப்பூரில் பாசிச எதிா்ப்புக் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:31 pm

DIN

புதிய கல்விக்கொள்கையை உள்ளிட்ட மத்திய அரசு அமல்படுத்தும் கொள்கைகளைக் கண்டித்து திருப்பூரில் பாசிச எதிா்ப்புக் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிடா் விடுதலைக் கழக மாவட்டத் தலைவா் மு.முகில் ராசு தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

நீட் தோ்வு விவகாரத்தில் பாஜக அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது. ஹிந்தி, சமஸ்கிருத மொழிகள் கட்டாயமாக திணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. புதிய கல்விக்கொள்கை மூலமாக சமூக நீதியை ஒழிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திராவிடா் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி , எஸ்டிபிஐ கட்சி, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தந்தை பெரியாா் திராவிடா் கழகம், திராவிடா் கழகம், மே 17 இயக்கம், தலித் விடுதலை கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, திருவள்ளுவா் ஆதித்தமிழா் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.