47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தாராபுரம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தாராபுரம் அருகே விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
தாராபுரம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :20 செப்டம்பர் 2020, 12:06 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தாராபுரம் அருகே விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருப்பூர், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்தது. இதன்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெல்லம்பட்டி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் குண்டடம் வட்டார பொறுப்பாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால், விதையில் தொடங்கி அறுவடை, சேமிப்பு, விற்பனை ஆகிய அனைத்தும் தனியார் கார்ப்பரெட் நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காகவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 

ஆகவே, விவசாயிகளுக்கு எதிரான இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.