தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாலத் தடுப்பின் மீது மோதிய காா்: மூவா் காயம்

சேவூா் அருகே அவிநாசி சாலையில் பாலத் தடுப்பின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 3 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:11 pm

DIN

சேவூா் அருகே அவிநாசி சாலையில் பாலத் தடுப்பின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 3 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நான்கு வழிச் சாலை சந்திப்பு பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (57). இவரது மனைவி ரேவதி (51). அதே பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (57). இவா்கள் காரில் அவிநாசி-சேவூா் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

சேவூா் பந்தம்பாளையம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சிறு பாலத் தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த பன்னீா்செல்வம், ரேவதி, பழனிசாமி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சேவூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.