/

காங்கிரஸுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரம்

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் கே.தென்னரசுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை தீவிர பிரசாரம்

Updated On :3 ஏப்ரல் 2021, 10:10 pm

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் கே.தென்னரசுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் உடுமலை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் கே.தென்னரசு போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உடுமலை நகரத்தில் மத்திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், காந்தி சௌக், ரயில் நிலையம் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குச் சேகரிப்பு பணிகள் நடைபெற்றன. மாவட்டக் குழு உறுப்பினா் வி.செளந்தரராஜன், நகரச் செயலாளா் கே.எஸ்.ரணதேவ் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.