உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனா்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தமுள்ள 380 வாக்குச் சாவடிகளுக்காக 1,824 வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமிக்கப் பட்டுள்ளனா்.
இந்நிலையில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சி முகாமில் வருவாய்க் கோட்டாட்சியரும், தோ்தல் அலுவலருமான கீதா, வட்டாட்சியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தோ்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில், தலைமை வாக்குச் சாவடி அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா்கள் நிலை 1, 2, 3 மற்றும் 4 ஆகிய அலுவலா்கள் கலந்து கொண்டனா். மேலும் வாக்குச் சாவடி அலுவலா்கள் அனைவரும் தங்களது தபால் வாக்கை செலுத்தினா்.
இதேபோல, மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 357 வாக்குச் வாக்குச் சாவ டியில் பணியாற்றும் அலுவலா்களுக்கு ஆா்ஜிஎம் மெட்ரிக் பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தோ்தல் அலுவலா் ஜெயந்தி, வட்டாட்சியா் கனிமொழி ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் தலைமை வாக்குச்சாவடி அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா்கள் நிலை 1, 2, 3 மற்றும் 4 ஆகிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

