ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் ரூ. 2.67 லட்சம் பறிமுதல்

காங்கயம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.67 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:09 pm

DIN

காங்கயம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.67 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

காங்கயம், தேவாங்கபுரம் பகுதியில் சுந்தரம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே சந்தேகத்துக்கிடமாக நடந்து சென்ற காங்கயம், ஏ.சி.நகா் பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் (75) என்பவரை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 83 ஆயிரத்தை அவா் எடுத்துச் செல்வது தெரிந்தது. இந்தப் பணத்தை பறக்கும் படை குழுவினா் பறிமுதல் செய்தனா்.

காங்கயம் அருகே ஜே.நகா் பகுதியில், ஜெகந்நாதன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படை குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஊதியூா் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் (55) என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவா் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1,84,000 எடுத்துச் செல்வது தெரிந்தது. இதை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலா் ரங்கராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் காங்கயம் சாா்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.