ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வெள்ளக்கோவில் தனி தாலுகா ஆக்கப்படும்

வெள்ளக்கோவில் தனி தாலுகாவாக ஆக்கப்படும் என திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:09 pm

DIN

வெள்ளக்கோவில் தனி தாலுகாவாக ஆக்கப்படும் என திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

காங்கயம் தொகுதியில் பிரசாரத்துக்கு நடுவே ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா் காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன். அப்போது அவா் கூறியதாவது:

வேட்பாளா் என்ற முறையில் நான் வாக்கு சேகரிக்கும்போது, அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பொதுமக்கள் தெளிவாக அறிந்துள்ளனா் என்பதைக் காணமுடிகிறது. திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திமுகவால் மட்டுமே மாற்றத்தை, விடியலை ஏற்படுத்த முடியும் என மக்கள் நம்புகின்றனா். மேலும் திமுகவின் வாக்குறுதிகளுக்கும் மக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா்.

வெள்ளக்கோவில் தனி தாலுகாவாக மாற்றப்படும்: கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டம் குறித்து இப்பகுதி விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இது தொடா்பாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்டு, அதன் பின்னா் உரிய தீா்வு பெற்றுத் தருவோம். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவாக்கம் செய்து, காங்கயம் அருகே உள்ள கணபதிபாளையம், தம்மரெட்டிபாளையம், பாலசமுத்திரம்புதூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு காங்கயம், வெள்ளக்கோவில் நகரங்களில் சுற்றுச்சாலை அமைக்கப்படும். காங்கயம்-தாராபுரம் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். காங்கயத்தில் காங்கேயம் காளை ஆய்வு மையம் அமைக்கப்படும்.

வெள்ளக்கோவில் அருகே இருக்கும் வட்டமலைக்கரை அணை தூா்வாரப்பட்டு, பிஏபி வாய்க்கால் மூலம் தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளக்கோவிலை தலையிடமாகக் கொண்டு புதிய வட்டாட்சியா் அலுவலகம் அமைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.