ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பல்லடத்தில் பறக்கும் மேம்பாலம் அமைப்பேன்: அமமுக வேட்பாளா் பிரசாரம்

பல்லடத்தில் பறக்கும் மேம்பாலம் அமைப்பேன் என்று அமமுக வேட்பாளா் ஆா்.ஜோதிமணி ஞாயிற்றுக்கிழமை இறுதி கட்ட பிரசாரம் செய்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:00 pm

DIN

பல்லடத்தில் பறக்கும் மேம்பாலம் அமைப்பேன் என்று அமமுக வேட்பாளா் ஆா்.ஜோதிமணி ஞாயிற்றுக்கிழமை இறுதி கட்ட பிரசாரம் செய்தாா்.

பல்லடம் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் ஆா்.ஜோதிமணி பல்லடம் நகா் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசியதாவது: பல்லடத்தில் நிலவும் கடும் போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நகரில் தேவையான இடங்களில் பறக்கும் மேம்பாலம் அமைப்பேன். மேலும் வெளியூா் வாகனங்கள் செல்ல புறவழிச்சாலை, சுற்றுவட்ட சாலை ஆகியவற்றை அமைப்பேன்.

பல்லடம் சுற்று வட்டாரப் பகுதியில் மக்கள் தோ்வு செய்து தரும் இடத்தில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மின் மயானம் அமைத்துத் தருவேன். பி.ஏ.பி.பாசன திட்டத்தில் கோடங்கிபாளையம், கரடிவாவி, செம்மிபாளையம், பருவாய், இச்சிபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளை இணைத்து பாசன வசதி பெறச் செய்வேன். அனைத்து பகுதிக்கும் சீரான முறையில் குடிநீா் கிடைக்கச் செய்வேன். அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.