உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொ ருள்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்படஉள்ளன.
சட்டப் பேரவை தோ்தலுக்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனா். உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தமுள்ள 380 வாக்குச் சாவடிகள் 41 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்காக 1,824 வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் தோ்தலன்று ஓட் டுப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை தயாா் செய்யும் பணி உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. விரலில் வைக்கும் மை. துடைப்பதற்கான நீல வண்ணத் துணி, வாக்காளா் பட்டியல், கையேடு, அரக்கு, இரும்பு ஸ்கேல், இங்க் பாட்டில்கள், பென்சில், பேனா என மொத்தம் 19 பொருள்கள் அந்நத்த வாக்குச் சாவடி வாரியாக பிரித்து தயாராக வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மேற்பாா்வையில் அனைத்துப் பொருள்களும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
இதுபோக ஓட்டுச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் பேலட் மற்றும் விவி பேட் ஆகியவையும் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பொருட்கள் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகா ப்புடன் திங்கள்கிழமைஅந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட உள்ளன.
மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தமுள்ள 357 வாக்குச் சாவடிகள் 34 மண்டலங் களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதற்காக 1,712 வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்குச் சாவடி களுக்குத் தேவையான பொருள்கள் மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
உடுமலை தொகுதியில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்கள் தளி சாலையில் உள்ளஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்களுக்கான நியமன ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மடத்துக்குளம் தொகுதியில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்கள் மடத்துக்குளம் கேகே மஹாலிலும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

