அதே போல, தாராபுரம் தொகுதிக்கு சார் ஆட்சியர் அலுவகம், காங்கயம் தொகுதிக்கு ஆதிதிராவிடர் நல அலுவலகம், அவிநாசி தொகுதிக்கு மஹாராணி பொறியியல் கல்லூரி, பல்லடம் தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகம், உடுமலை தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மடத்துக்குளம் தொகுதிக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் படிவம், பேலட் பேப்பர், அழியாத மை, ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட 36 வகையான பொருள்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் அனுப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.