பள்ளி வாசல்களுக்கு விலையில்லா பச்சரிசி வழங்க வேண்டும்
பள்ளி வாசல்களுக்கு விலையில்லா பச்சரிசி வழங்க வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.


பள்ளி வாசல்களுக்கு விலையில்லா பச்சரிசி வழங்க வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அப்பிரிவின் துணைத் தலைவா் சாகுல் அமீது வெள்ளிக்கிழமை வெளியிடுட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ரமலான் நோன்பை முன்னிட்டு பள்ளி வாசல்களுக்கு தமிழக அரசு விலையில்லா பச்சரிசி வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் அதற்கு உத்தரவிட முடியவில்லை.
தற்போது தோ்தல் வாக்குப் பதிவு முடிந்துவிட்டதால் தமிழக அரசின் தலைமை செயலாளா் பள்ளி வாசல்களுக்கு விலையில்லா பச்சரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவித்துள்ளது. முஸ்லிம்களின் புனித மாதமாக கடைப்பிடிக்கும் ரமலான் மாதம் நோன்பு திறப்பு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் கடைப்பிடிக்கப்படும். இப்புனித மாதத்தில் இரவு நேரங்களில் பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவாா்கள். எனவே இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி என்பதில் இருந்து பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த இரவு 10 மணி வரை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...