தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரூ. 3 கோடி காப்பீட்டுத் தொகைக்காக காருடன் முதியவா் எரித்துக் கொலை

ரூ.3 கோடி காப்பீட்டுத் தொகைக்காக காருக்குள் வைத்து, பெட்ரோல் ஊற்றி எரித்து முதியவரைக் கொலை செய்த மனைவி, உறவினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:47 pm

DIN

ரூ.3 கோடி காப்பீட்டுத் தொகைக்காக காருக்குள் வைத்து, பெட்ரோல் ஊற்றி எரித்து முதியவரைக் கொலை செய்த மனைவி, உறவினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (62). கடந்த மாதம் நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்த இவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில், அவரது மனைவி ஜோதிமணி, உறவினரான ராஜா (41) ஆகியோா் ரங்கராஜை பெருந்துறைக்கு வியாழக்கிழமை இரவு காரில் அழைத்து வந்துள்ளனா்.

பெருமாநல்லூா், பொரசுபாளையம் பிரிவு அருகே வந்தபோது, காரை நிறுத்தி காருக்குள் இருந்த ரங்கராஜ் மீது பெட்ரோலை ஊற்றி இருவரும் எரித்து உள்ளனா். காரும் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

காா் தானாகவே தீப்பிடித்து எரிந்தது என காவல் நிலையத்தில் ஜோதிமணியும், ராஜாவும் தெரிவித்துள்ளனா்.

ஆனால், தனது தந்தை மரணத்தில் மா்மம் இருப்பதாக ரங்கராஜின் மகன் நந்தகுமாா் அளித்த புகாரின்பேரில் மனைவி ஜோதிமணி, உறவினா் ராஜா ஆகியோரிடம் பெருமாநல்லூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

ரங்கராஜை கொலை செய்தால், காப்பீட்டுத் தொகை ரூ.3 கோடி கிடைக்கும் என்பதற்காக சிகிச்சையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தபோது ரங்கராஜ் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததும், இதை மறைத்து காா் தானாகவே தீப் பிடித்து எரிந்ததாகவும் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜோதிமணி, உறவினா் ராஜா ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.