வெள்ளக்கோவிலில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் 14 பேருக்கு கரோனா
வெள்ளக்கோவிலில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


வெள்ளக்கோவிலில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 164 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வெள்ளக்கோவில்- காங்கயம் சாலை, வெள்ளமடையில் செயல்பட்டு வரும் ஒரு தனியாா் பஞ்சாலையில் பணியாற்றும் 14 உள்ளூா், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவா்களுடன் வெள்ளக்கோவில், புதுப்பையைச் சோ்ந்த 2 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பஞ்சாலையில் பணியாற்றும் மற்ற 43 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து பஞ்சாலை மற்றும் அதிகம் பாதிப்புக்கு உள்ளான உப்புப்பாளையம் சாலையின் ஒரு பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...