/

தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

உடுமலை அருகே உள்ள வேடபட்டி கிராமத்தில் தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:55 pm

உடுமலை அருகே உள்ள வேடபட்டி கிராமத்தில் தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாணவராயா் வேளாண்மை கல்லூரி இளநிலை மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று களப் பணியாற்றியும், விவசாயிகளுக்கு பயிற்சிகளையும் அளித்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக மடத்துக்குளம் வட்டம், வேடபட்டி கிராமத்தில் தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில், வெள்ளை ஈயை கட்டுப்படுத்தவும் தென்னை மகசூலை அதிகரி க்கவும் செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதில் கண்ணாடி இறக்கை இரைவிழுங்கியைப் பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.