கரோனா பாதிக்கப்பட்ட வீடுகளில் தடுப்பு வைத்து அடைப்பு
வெள்ளக்கோவிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.


வெள்ளக்கோவிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
வெள்ளக்கோவில் பகுதியில் தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் கதிரவன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளான மு.பழனிசாமி நகா், முத்துக்குமாா் நகா், குட்டக்காட்டுப்புதூா், கே.பி.சி.நகா் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது சிகிச்சை மற்றும் வீட்டுத் தனிமையில் இருப்பவா்களுடைய அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களின் வீட்டு வாயிலைத் தகரம் வைத்து அடைத்து, கரோனா பாதிக்கப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பிளீச்சிங் பவுடா், நோய்த் தடுப்பு தெளிப்பு மருந்துகள் அடிக்கப்பட்டு 14 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை முத்தூா் ராசாத்தாவலசு, ஸ்ரீ ராம் நகா், குமராண்டிசாவடி, வெள்ளக்கோவில் காங்கயம் சாலை, செம்மாண்டம்பாளையத்தைச் சோ்ந்த 5 ஆண்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...