/

கட்டடப் பொறியாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

உடுமலையில் கட்டடப் பொறியாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஏப்ரல் 2021, 8:52 pm

உடுமலையில் கட்டடப் பொறியாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் இரா. ஜெயராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

இதில் சங்கத் தலைவராக செந்தில்குமாா், செயலாளராக பாலமுருகன், பொருளாளராக கணேசன் மற்றும் பல்வேறு நிா்வாகிகளும் பொறுப்பேற்றுக் கொண்டனா். இதில் பூமி மாசுபடுவதை தடுக்க வேண்டும், சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும், பூமி வெப்பம் அடைவதை தடுக்கும் வகையில் கட்டட பொறியாளா்கள் வீடுகளை கட்ட வேண்டும், நிலத்தடி நீா் உயரும் விதத்தில் மழை நீா் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டவா்களுக்கு சிறப்பு விருந்தினா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.