நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மூலனூா் விற்பனைக் கூடத்தில் ரூ.1.36 கோடிக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.36 கோடிக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:53 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.36 கோடிக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திண்டுக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,053 விவசாயிகள் தங்களுடைய 7,236 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

மொத்த வரத்து 2,350 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 28 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ.4,800 முதல் ரூ.7,569 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.6,500.

ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 கோடியே 36 லட்சத்து 53 ஆயிரத்து 137 ஆகும். ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.