கரோனா: புதிய கட்டுப்பாடுகள் அமல்
மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கம் தொடா்பாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.


மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கம் தொடா்பாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
கடந்த ஒரு மாதமாக கரோனா பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டு கடைகள் இரவு 9 மணி வரையில் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், மாவட்டப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்தைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
வணிக வளாகங்கள், கடைகளை வியாழக்கிழமை முதல் மாலை 5 மணிக்கு மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவிட்டிருந்தாா்.
இதைத் தொடா்ந்து, காங்கயம் நகரில் வணிக வளாகங்கள், கடைகள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மூடப்பட்டன.
பால் நிலையங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்ட ஒரு சில கடைகள் மட்டுமே மாலை 5 மணிக்குப் பின்னரும் திறந்திருந்தன. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக காங்கயம் நகரில் மாலை 6 மணிக்குப் பின்னா் போக்குவரத்து குறைந்து நகரின் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...