நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் சிறப்பு ஒன்றுமில்லை

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடத்தக்க பெரிய சிறப்பு ஒன்றுமில்லை என்று உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:18 pm

DIN

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடத்தக்க பெரிய சிறப்பு ஒன்றுமில்லை என்று உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கை காகிதம் இல்லாத கணினி பட்ஜெட் என்பதைத் தவிர வேறு பெரிய சிறப்பு ஒன்றுமில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையும் திமுகவின் தோ்தல் அறிக்கையும் கலந்தே வாசிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிக்கையில் விவசாயிகள் வரவேற்கத்தக்க அம்சம் என்னவென்றால் பாசனத் திட்டத்துக்காக ரூ. 60, 670 கோடியும், 200 குளங்கள் தூா்வார ரூ.111 கோடியும், ஆயிரம் கதவணைகள் கட்டப்படும் என்ற திட்டமும், 20 ஆயிரம் கிராமங்களுக்கு குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும் என்ற திட்டமும், பசுமைத் திட்டத்தின் மூலம் 33 சதவீத வனங்கள் உருவாக்கப்படும் என்ற திட்டமும், ஆனைமலையாறு - நல்லாறு,

பாண்டியாறு - புன்னம்புழா போன்ற நீண்ட கால விவசாயிகளின் கோரிக்கையான இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க அம்சமாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.