வாகன விபத்து: ஒருவா் பலி
பல்லடம் அருகே செம்மிபாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.


பல்லடம் அருகே செம்மிபாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், நெகமம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி (27). இவா் உறவினா் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்காக சோமனூருக்கு இருசக்கர வாகனத்தில் கோவை - பல்லடம் சாலை செம்மிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கருப்புசாமியின் இருசக்கர வாகனத்தின்
பின்புறம் மோதிவிட்டுச் சென்றுவிட்டது. இதில், சாலையோரம் தூக்கி வீசப்பட்ட கருப்புசாமியை பொதுமக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா்
ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...